டென்மார்க்கில் என்ன பிரச்சனை தெரியுமா?
டென்மார்க் நாட்டின் பிரதமராக இருப்பவர் மெட்டே பிரடரிக்சென். அந்த நாட்டின் கார்பரேட் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ள இவர். நோவோ நார்டிஸ்க் என்ற நிறுவன திவாலாகும் சூழலால் பெரிய பிரச்சனை இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். டென்மார்க் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட நோவோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகம். அதாவது 570 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாக நோவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புளூம்பர்க் நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள டென்மார்க் பிரதமர், தங்கள் நாட்டில் திறமையான பணியாளர்கள் இருப்பதை கண்டு பெருமை கொள்வதாகவும் மெட்டே கூறியுள்ளார். நோவோ நிறுவனம் டென்மார்க்கில் இருந்தாலும் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தங்கள் கிளையை விரிவுபடுத்தி வருகிறது. டென்மார்க்கின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மருந்துத்துறையின் பங்கு மட்டும் 6.7 விழுக்காடாக இருக்கிறது. அதே நேரம் நிதித்துறை 5.4%, கட்டுமானத்துறையின் ஜிடிபி மட்டும் 5.1%பங்களிப்பை தருக்கிறது. நோவோ மற்றும் மருந்து நிறுவனங்களை விட டென்மார்க்கின் பொருளாதாரம் தான் முக்கியம் என்று மெட்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.