ஜீரோதா வாடிக்கையாளர்களிடம் 5.66 டிரில்லியன் ரூபாய் பணம்..
பங்கு வர்த்தக நிறுவனமான ஜீரோதாவின் இணை நிறுவனராக இருப்பவர் நிதின் காமத்,.இவர் தனது நிறுவனத்தின் லாபம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில் 4,700 கோடி ரூபாய் லாபமாக தங்கள் நிறுவனத்துக்கு கிடைத்திருப்பதாகவும், 2023-24 நிதியாண்டில் மட்டும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் 5.66 டிரில்லியன் இந்திய ரூபாய் கணக்கில் இருப்பதாக கூறியுள்ளார்.
தங்கள் தளம் வாயிலாக வாடிக்கையாளர்கள் 1 டிரில்லியன் ரூபாய் அளவுக்கு லாபம் பெற்றுள்ளதாகவும் காமத் தெரிவித்துள்ளார். 2024 நிதியாண்டில் மட்டும் ஜீரோதா நிறுவனத்தின் வருவாய் 8320 கோடி ரூபாயாக உள்ளதாகவும்,பியூச்சர்ஸ் அன்ட் ஆப்சன்ஸ் துறையை நம்பி இல்லாமல் அதில் கவனத்தை குறைக்கப்போவதாகவும் காமத் குறிப்பிட்டார். தங்கள் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 2 அல்லது 3 ஆம் தர நகரங்களில் இருப்பவர்கள் என்று குறிப்பிட்டுள்ள காமத், கடந்த 2 ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், தற்போது கணக்கு தொடங்க எந்த கட்டணமும் இல்லை என்றும் அறிவித்துள்ளார். கடந்தாண்டு அக்டோபர் முதல் கடந்த ஜூலை வரை மட்டும் இதுவரை 5 முறை தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டதாக கூறியுள்ள இந்நிறுவனம், கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் தேதி 44 நிமிடங்கள் நீடித்த கோளாறே அதிகபட்சம் என்று கூறியுள்ளது,. தற்போது வரை ஜீரோதா நிறுவனத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 1,200 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது