ஐடிசிக்கு கிடைத்த ஒப்புதல்..
ஐடிசி நிறுவனம் தனது ஹோட்டல் பிரிவை தனியாக நடத்த தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேற்குவங்க நிறுவனங்களின் பதிவாளர் உள்ளிட்டோரின் முன்னிலையில் விரைவில் இது தொடர்பான பணிகள் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. சிகரெட் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை விற்று வரும் ஐடிசி நிறுவனம், தனது ஹோட்டல் பிரிவு வணிகத்தை தனியாக நடத்த 2023 ஆகஸ்ட்டில் முடிவெடுத்தது. ஐடிசியில் இருந்து ஹோட்டல் வணிகம் தனியாக சென்றாலும், அதில் 60% ஐடிசி பங்குதாரர்களுக்கு செல்லும், மீதமுள்ள 40%பங்குகள் ஐடிசி வசமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐடிசி நிறுவனத்தில் இருந்து உணவக பிரிவு மட்டும் தனியாக செல்வதற்கு ஐடிசி பங்குதாரர்கள் கடந்த ஜூனில் ஒப்புதல் அளித்தனர். இதற்கு தற்போது அரசாங்கமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுமட்டுமின்ற இந்திய போட்டி ஆணையமும் பிரிவுக்கு கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தது. வேகமாக வளர்ந்து வரும் ஹோட்டல் துறையை தனியாக நடத்த திட்டமிட்டே பிரிவு நடந்ததாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஐடிசி நிறுவன பங்குகள் 1.56% குறைந்து ஒரு பங்கு 504.75 ரூபாயாக விற்கப்பட்டது.