சுடியோ வென்ற கதை..
சுடியோ என்ற ஒரு துணிக்கடை பிராண்டை வெற்றி பிராண்டாக டாடா குழுமம் மாற்றியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து சுடியோ நிறுவனம் தனது அழகுசாதன பொருட்கள் சந்தையை தொடங்கயிருக்கிறது. பெங்களூருவில் இதன் முதல் கடை திறக்கப்பட்டுள்ளது. விரைவில் புனே, குருகிராம், ஹைதராபாத் நகரங்களிலும் சுடியோ பியூட்டி கடைகள் வர உள்ளன. இந்த சந்தையில் ஏற்கனவே ரிலையன்ஸ், நைகா உள்ளிட்ட போட்டியாளர்கள் இருந்தாலும், துணிக்கடையில் பயன்படுத்திய அதே உத்தியை இங்கும் பயன்படுத்த டாடா குழுமம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. லேக்மி நிறுவனத்தை முதலில் இந்தியாவில் டாடா நிறுவனம்தான் உருவாக்கியது பின்னர் அந்த நிறுவனத்தை இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்திடம் கடந்த 1996-ல் டாடா விற்றது. சுடியோவைப் போலவே டிரென்ட் நிறுவனமும் விற்பனையில் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. சுடியோ நிறுவனத்தின் வெற்றியைத் தொடர்ந்து டிரென்ட நிறுவன சந்தையை துபாயிலும் அந்நிறுவனம் சிலிக்கான் ஒயாசிஸ் மாலில் திறந்துள்ளது. சிறிய நகரங்களிலும் மக்கள் எளிமையாக வாங்கும் வகையில் அதே நேரம் ஸ்டைலான துணிகளை விற்பதே சுடியோவின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆயிரத்து 500ரூபாய்க்கு மேல் எந்த துணியும் இல்லை என்பதே சுடியோநிறுவனத்தின் வெற்றியாக கருதப்படுகிறது. சுடியோவின் வெற்றியை தொடர்ந்து ரிலையன்ஸ், யூஸ்டா, ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனம் இன்டியூன் என்ற பெயரில் துணிக்கடைகளை தொடங்கியுள்ளனர்.