எலான் மஸ்க்கின் அடுத்த படைப்பு சைபர் கேப்..
மனித முயற்சிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வதில் வல்லவராக இருப்பவர் எலான் மஸ்க்.புதுப்புது முயற்சிகளை செய்துகொண்டே இருக்கும் அவர், அமெரிக்காவில் cybercab என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வாகனத்தில் ஸ்டீரிங் வீலோ,பெடல்களோ இருக்காது. ஓட்டுநர் இல்லாத கார்கள்தான் எதிர்காலத்தின் தொழில்நுட்பம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த புதிய கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் தயாரிப்பு 2026-ல் தொடங்கப்படும் என்றும் 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்த வகை கார்கள் இந்திய மதிப்பில் 25.2லட்சம் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ், கலிஃபோர்னியா ஆகிய பகுதிகளில் அடுத்தாண்டே கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா மாடல் 3, மாடல் ஒய் ஆகிய கார்களிலும் இந்த வசதி ஆரம்பத்தில் அளிக்கப்பட இருக்கிறதாம். மாடல் எஸ், சைபர் டிரக்கிலும் இந்த வசதி கிடைக்க உள்ளது. முழுமையாக 2026-ல் இந்த வசதி கிடைத்துவிடும். பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழப்பி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு மூலம் எதுவும் சாத்தியம் என்று புருவத்தை உயர்த்துகிறார் எலான் மஸ்க். முதல்கட்டமாக 50 டாக்சிகளை அறிமுகப்படுத்த உள்ளார் மஸ்க். ஒயர்லஸ் சார்ஜிங் செய்யும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆளில்லா கார்களை வெய்மோ போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் நிலையில், டெஸ்லா நிறுவனம் வெறும் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவை மட்டுமே வைத்து தங்கள் நிறுவன தயாரிப்பை காட்சிபடுத்தியுள்ளது.