டாடா டிரஸ்ட்ஸ் தலைவரானார் நோயல் டாடா..
டாடா டிரஸ்ட்ஸ் குழுமத்தின் தலைவராக நோயல் டாடா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொது சேவைகளுக்கு பெயர் பெற்ற டாடா குழுமத்தின் அறக்கட்டளை தலைவராக இருந்த ரத்தன் டாடா அண்மையில் மறைந்தார். இதையடுத்து நோயல் டாடா இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரத்தன் டாடாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த நோயல் தற்போது, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசத்தை வளர்ப்பதில் சேவையை தொடர்வேன் என்று நோயல் டாடா தெரிவித்துள்ளார். யார் இந்த நோயல் டாடா என்று பலரும் யோசிக்கும் நிலையில் அவரும் டாடா குழுமத்தில் பெரிய நிர்வாக பொறுப்பில்தான் இருக்கிறார். அதிவேகமாக வளர்ந்து வரும் டிரென்ட் என்ற நிறுவனத்தையும், வோல்டாஸ், டாடா இன்வஸ்ட்மென்ட் கம்பெனி, டாடா இன்டர்நேஷனல் லிமிட்டட் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளார். 500 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இவர் வகித்த நிறுவன பதவிகளில் தற்போது 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க உதவியவர் நோயல் டாடாய சசக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர் நோயல் டாடா, தோராப்ஜி டாடா குழுமத்தின் அறக்கட்டளை , ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் 11 ஆவது தலைவராக நோயல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரத்தன் வகித்து வந்த பதவியை தற்போது நோயல் வகிப்பதால் குடும்பத்தின் நன்மதிப்பு தொடர்ந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் டாடா டிரஸ்ட் நிறுவனம் 470 கோடி ரூபாய் அளவுக்கு பொது சேவைகளுக்கு நிதி அளித்துள்ளது. சர் ரத்தன் டாடா டிரஸ்ட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டில் நுழைந்த நோயல், டைட்டன் கம்பெனியின் துணைத்தலைவராக பதவியேற்றார். பின்னர் டாடா ஸ்டீலின் துணைத்தலைவராக கடந்த 2022-ல் பதவியேற்றார்.