22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

சுதா மூர்த்தி விரும்பிய 2 பரிசுகள்..

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மறைவுக்கு இந்தியாவின் பல பிரபல தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் ரத்தன் டாடா பற்றி இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தனது இரங்கலை உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். தனது ஊழியர்களை ரத்தன் டாடா பார்த்துக்கொள்ளும் விதம் குறித்தும் சுதா மூர்த்தி நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார். தனக்கு சொந்தமான பிபிபி பொறியியல் கல்லூரிக்கு வர வேண்டும் என்று கேட்டபோது, ரத்தன் டாடா நிகழ்ச்சியில் பங்கேற்றதாக சுதா மூர்த்தி குறிப்பிட்டுள்ளார். ஜாம்ஷெத் டாடா மற்றும் ஜே ஆர்டி டாடாவின் புகைப்படங்கள் வேண்டும் என்று ரத்தன் டாடாவிடம் 1990-ல் கேட்டதாகவும், அதனை ரத்தன் டாடாவும் அளித்ததால், அவற்றை இன்னும் தனது அலுவலகத்தில் வைத்திருப்பதாக சுதா மூர்த்தி கூறியுள்ளார். புதுப்புது கண்டுபிடிப்புகளை தெரிந்துகொள்வதில் ரத்தன் டாடாவுக்கு ஆர்வம் அதிகம் என்றும், அவரை மிஸ் செய்வதாகவும் சுதா குறிப்பிட்டுள்ளார். ரத்தன் டாடாவின் அமைதியை கண்டு தாமும் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் சுதா கூறினார். ரத்தன் டாடவின் டெல்கோ நிறுவனத்தில் சுதா மூர்த்தி பொறியாளராக புனேவில் பணியாற்றியிருந்தார். மும்பை மற்றும் ஜாம்ஷெத்பூரிலும் சுதா பணியாற்றினார். ஆண்கள் மட்டுமே டெல்கோவில் பணியாற்றுவதாக ஆதங்கம் வெளியிட்ட சுதாவை உடனடியாக அந்நிறுவனம் பணியில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 86 வயதான ரத்தன் டாடா கடந்த 9 ஆம் தேதி மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் உயிரிழந்தார். வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் அவர் உயிர் பிரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *