மீண்டும் வீழ்ந்த இந்திய சந்தைகள்….
வாரத்தின் 3ஆவது வர்த்தக நாளான புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து081 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் சரிவு காணப்பட்டது. நிஃப்டி 36 புள்ளிகள் சரிந்து 24ஆயிரத்து 435 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. Bajaj Finance, Bajaj Auto, Tech Mahindra, HCL Tech, Tata Consumer நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன M&M, Sun Pharma, NTPC, Power Grid Corp, Shriram Financeஉள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெரிதாக சரிவை கண்டன தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் மட்டுமே உயர்ந்தன. ஆற்றல், மருந்துத்துறை பங்குகள் தலா 1 விழுக்காடு சரிந்தன Amber Enterprises, Coforge, Deepak Fertilisers, Firstsource Solutions, Indigo Paints, Max Financial, MCX India, Persistent Systems, Suven Pharma, Tube Investment, உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. அக்டோபர் 23 ஆம் தேதி புதன்க்கிழமை ஆபரணத்தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டது. ஒரு கிராம் தங்கம்7ஆயிரத்து340 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து720ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2ரூபாய் உயர்ந்து 112 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 2ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.