ஃபோர்டு நிறுவன அதிகாரி பேசியது என்ன…
பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் ஃபார்லேஅண்மையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த கார் நிறுவனத்தின் ரகங்களை பட்டியல் இடும்போது சீன கார் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையும் சுட்டிக்காட்டினார். சீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஷியாவ்மி எஸ் யு 7 என்ற கார் தனது விருப்பமான கார்களில் ஒன்றாக திகழ்வதாக குறிப்பிட்டார். கடந்த 6 மாசங்களாக இந்த காரை பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். ஷியாவ்மி, பிஒய்டி போன்ற சீன நிறுவனங்களுடன் போட்டி போட அமெரிக்க கார் தயாரிப்பாளர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார். ஷியாவ்மி எஸ்யு7 ரக கார்கள் இந்தாண்டுதான் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. இந்த கார் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக் கூடியது. 30ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மட்டுமே இந்த கார் விலை கொண்டது. ஏர்சஸ்பென்ஷென் சிஸ்டம், தானியங்கி வசதி, சீனாவின் 100 நகரங்களில் பரிசோதிக்கப்பட்டது என்றும் சந்தையில் பெரிய வரவேற்பை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அறிமுகப்படுத்திய முதல் நாளிலேயே இந்த வகை கார்கள் விற்றுத்தீர்ந்துவிட்டன. அதாவது 1லட்சம் கார்கள் ஒரே நாளில் விற்றுவிட்டன, போட்டி நிறுவன கார்களை பிரிபல கார் தயாரிப்பு நிறுவன அதிகாரிகள் பயன்படுத்தி பார்ப்பது இயல்புதான் என்ற போதிலும் சொந்த பிராண்டை விட மாற்று சீன பிராண்டை புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.