வருங்காலம் இனி டிஜிட்டல்தான்..தப்பவே முடியாது..
பணத்தின் எதிர்காலம் என்பது நிச்சயம்டிஜிட்டலாகத்தான் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததால் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த ஜி30 அமைப்பின் வருடாந்திர சர்வதேச வங்கித் தொடர்பான கருத்தரங்கில் அண்மையில் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார். மத்திய வங்கிகளின் ஒத்துழைப்பு குறித்தும் அவர் நிகழ்ச்சியில் பேசினார்.
நாடுகளின் எல்லைகளை கடந்து டிஜிட்டல் பணம் செல்வதால் இடைத்தரகர்களுக்கு வேலைஇல்லை என்றார். குறைவான கட்டணத்தில் பணத்தை விரைவாகவும் அனுப்ப மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி அமைப்பான் சிபிடிசி உதவுவதாகவும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து மத்திய வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ, மெக்சிகோவின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அகஸ்டிங் கார்ஸ்டென்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். பன்னாட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் சக்தி காந்ததாஸ் பேசினார். சிபிடிசி மற்றும் யுபிஐ பணப் பரிவர்த்தனை நுட்பம் ஆகியவை ஒத்திசையும் இரு அமைப்புகள் என்றும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார். தற்போது 50 கோடி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் வாயிலாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டில் இது ஒரு நாளில் 100 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2022-ல் இந்திய மத்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை சிபிடிசி வாயிலாக அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த பணப்பரிவர்த்தனைக்கு அத்தனை பெரிய ஆதரவை இந்தியர்கள் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.