தங்கம் மீது செபி புதிய கட்டுப்பாடுகள்..
தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பல்வேறு வகைகளில் செய்ய முடியும். குறிப்பாக தங்கத்தை கட்டிகள் மற்றும் ஆபரணங்களாகவும், தங்க பத்திரங்களாகவும், தங்க ஈடிஎப் ஆகவும் வாங்க முடியும், இந்நிலையில் புதிய முறையும் சந்தையில் வந்துள்ளது. கோல்ட் ஈஜிஆர். தங்கத்தின் தேவை இந்தியாவில் ஆண்டுதோறும் 900 முதல் 1000 டன்கள் வரை உயர்கிறது. உலகிலேயே அதிக தங்கத்தை வாங்கும் நாடும் இந்தியா தான்.
இந்நிலையில் இந்தியாவில் பங்குச்சந்தைகளில் தங்கத்தை வாங்கும் புதிய ஃபிரேம்ஒர்க்கை செபி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈஜிஆர் என்பது தங்கக் கட்டிகள், நகைகளை பெற்றுக்கொண்டு அதற்கு பணம் அளிப்பது. பெட்டகத்தில் வைத்துக்கொள்ளும் வகையில் அறிமுகமாகியுள்ள ஈஜிஆர் திட்டத்தின்படி அதற்கு நிகரான பணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பெட்டகத்தை செபி நிர்வகிக்கும், 50,100 கிராம் மற்றும் 1 கிலோ வரை கூட தங்கத்தை பெட்டகத்தில் வைக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் வெளிப்படையானமற்றும் ஆக்கபூர்வமான பணம் கிடைக்கும். வீட்டில் நகையை வைத்திருப்பதை விடவும் ஈஜிஆர் மூலம் பெட்டகத்தில் வைப்பது பாதுகாப்பானது. டெல்லியில் நகைகளை வைத்து, அதற்கு நிகரான நகைகளை மும்பையில் எடுத்துக்கொள்ளலாம். ஈஜிஆர் வகையில் நகை பாதுகாப்பது என்பது ஒரு சேவை என்பதால் அதற்கு 3 விழுக்காடு ஜிஎஸ்டி செலுத்த நேரிடும். இந்தியா முழுவதும் ஒரே விலை கிடைக்கும். தங்கத்தின் விலைக்கான உயர்ந்த விலையை தொழில்நுட்பம் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும். பங்குச்சந்தைகளிலும் இந்த தங்கத்தை விற்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.