முதல்நாளிலேயே 6லட்சம் கோடி புஸ்க்….
வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 941புள்ளிகள் சரிந்து 78,782 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 314 புள்ளிகள் வீழ்ந்து 23,990 புள்ளிகளில் வணிகத்தை முடித்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து 1.14லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை வெளியே எடுத்தனர். இந்திய எண்ணெய் சந்தை படுத்தும் நிறுவனங்களான ஐஓசிஎல், பிபிசிஎல்,எச்பிசிஎல் நிறுவன பங்குகள் சரிந்தன. ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பங்குகள் 3.5 விழுக்காடு உயர்ந்தது. ஆசாத் இன்ஜினியரிங் நிறுவன பங்குகள் 8 விழுக்காடு வரை உயர்ந்தது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் 2 விழுக்காடு வரை உயர்ந்தது. நவம்பர் 4 ஆம் ஆம் தேதி திங்கட்கிழமை ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி விற்கப்பட்டன. ஒரு கிராம் தங்கம் 7ஆயிரத்து 370 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து 960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி 106 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. இங்கே நகை தொடர்பாக குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.