திரும்ப வராத 7 ஆயிரம் கோடி ரூபாய்
பணமதிப்பிழப்பு நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.இந்நிலையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலான ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி 6ஆயிரத்து977.6 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லையாம். அதாவது 98.04 விழுக்காடு அளவுக்கு உள்ள பழைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பிவிட்டன. திரும்ப வராத நோட்டுகளின் அளவு என்பது 1.96 %ஆக உள்ளதாக கூறப்படுகிறது. அக்டோபர் மாத இறுதியில் திரும்ப வராத தொகையின் மதிப்பு 6977.6 கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2018-19 காலகட்டத்திலேயே 2 ஆயிரம் ரூபாய் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. 89 விழுக்காடு அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2017 ஆம் ஆண்டுக்கு முன்பே அச்சிடப்பட்டு மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டன. அதிகபட்சம் 4 அல்லது 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக இந்த நோட்டுகள் தயாரிக்கப்பட்டன. கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டில் 6.73லட்சம் கோடி ரூபாயாக இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள், மார்ச் 31 ஆம் தேதி 3.62லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. இப்போதும் உங்களிடம் பழைய 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதனை ரிசர்வ் வங்கியின் டெல்லி அலுவலகத்தில் கொடுத்து வங்கிக்கணக்கில் வரவு வைக்கலாம், ஆனால் அதே நேரம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால் ஆதார் அட்டை மட்டுமே போதுமானது. 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகையாக இருந்தால் அதற்காக பான் அட்டை எண் அசல் காட்ட வேண்டும், பெரிய பைகளில் எல்லாம் 2,000 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல முடியாது. , டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகத்தில் அதிக தொகை செலுத்தச் சென்றால் அதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் தரப்பட்டு அதனை பூர்த்தி செய்த பிறகே புதிய மாற்று நோட்டுகள் உங்களுக்கு வழங்கப்படும்…