வங்கிகளில் வருகிறது ஏஐ வசதி..
போலியான கணக்குகளை ஆராய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை வங்கிகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. செயல்பாட்டில் இல்லாத பழைய கணக்குகளில் அதிக கடன் மற்றும் பல்வேறு வங்கிக்கணக்குகளில் ஒரேபாணியிலான பணப்பரிவர்த்தனைகளை இந்த செயற்கை நுண்ணறிவு நுட்பம் கண்டுபிடிக்க உதவும். பியூரோ, கிலாரிபை, டாடா சூத்ரம் உள்ளிட்ட நிறுவனங்கள், வங்களுக்கான செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை பயன்படுத்த உள்ளன. மோசடி நபர்கள் பணத்தை எடுக்கவும் பயன்படுத்தப்படும் கணக்குகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்று இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வழக்கத்துக்கு மாறான ஏதேனும் பரிவர்த்தனைகள் நடந்தால் உடனே வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். ஒரு மாதத்தில் 400 அல்லது 500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியான பணப்பரிவர்த்தனைகள் நடக்கும் நிலையில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் வங்கிகளுக்கு பேருதவியாக இருக்கும். பெங்களூருவைச் சேர்ந்த கிலாரிஃபை நிறுவனம் 200க்கும் அதிகமான சரிபார்ப்புகளை செய்து வங்கிக்கணக்குகளை கண்காணிக்கும். மெஷின் லர்னிங் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களையும் இந்த நிறுவனங்கள் வங்கிகளில் சோதிக்கும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அறிமுகமான பிறகு மோசடி கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க சிறப்பு வசதிகளை பயன்படுத்துவது குறித்து, வங்கிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.