39,000 ரூபாய்க்கு மின்சார ஸ்கூட்டர்..
இந்திய மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஓலா நிறுவனம் புதன்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 39 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு மின்சார ஸ்கூட்டர்களை விற்கப்போவதாக தெரிவித்துள்ளது. ஓலா எஸ்1ஜீ, கிக் ஆகிய இரண்டு புதிய மின்சார பைக்குகளும் அடுத்தாண்டு ஏப்ரல் முதல் டெலிவரி செய்யப்பட இருக்கின்றன. பேட்டரிகளை ஸ்கூட்டரில் இருந்து கழற்றி சார்ஜ் போடவும், வீட்டின் இன்வர்ட்டர் போல மாற்றமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சேவையில் குறைபாடு இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வரும் இந்த நேரத்தில் ஓலா நிறுவனத்தின் புதிய பைக்குகள் கவனம் ஈர்த்து வருகின்றன. அண்மையில் 500 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஓலா நிறுவனம், நிறுவனத்தை மறுசீரமைக்க ஆட்குறைப்பு தேவைப்பட்டதாக கூறியது. எஸ் 1 Gig ரக பைக்குகள் குறைந்த மற்றும் நீண்டு தூர பயணங்களுக்கு உகந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக 39,999, 49,999 ஆகிய இரண்டு விலைகளில் இந்த பைக்குகள் விற்பனைக்கு வர இருக்கின்றன. மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த பைக்குகள் ஒரு முறை சார்ஜ் போட்டால் 112 கிலோமீட்டர் வரை செல்லும். gigபிளஸ் ரக பைக்குகள் நெடுந்தூரம் பயணிக்கும் வகையிலும் 45 கிலோமீட்டர் வேகத்திலும் ஒற்றை அல்லது இரண்டு பேட்டரிகளை கொண்டதாகவும், அதே நேரம் 81 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு பைக்குகளிலும் 1.5கிலோவாட் பேட்டரிகளை வைக்க முடியும். இரண்டு பேட்டரிகள் கொண்ட வாகனங்கள் 157 கிலோமீட்டர் வைர ஒரு முறை சார்ஜ் செய்தால் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எஸ்1,எஸ்1ஜீ பிளஸ் ஆகிய இரண்டு ரக வண்டிகளிலும் 2 பேட்டரிகளை பயன்படுத்த முடியும், இரண்டிலும் 1.5 கிலோவாட் மின்சார பயன்பாடு இருக்கும். வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் பவர் பாட் வகை பேட்டரிகள் 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.