இரண்டாவது நாளாக தொடரும் சரிவு…

இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 502 புள்ளிகள் வீழ்ந்து 80,182 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 137 புள்ளிகள் சரிந்து 24,198 புள்ளிகளிலும் வணிகம் நிறைவுற்றது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைப்பது தொடர்பான அறிவிப்பை ஒட்டி முதலீட்டாளர்கள் கவனமாக முதலீடு செய்தனர். Trent, Dr Reddy’s Labs, Cipla, Wipro, Bajaj Autoநிறுவன பங்குகள் மட்டுமே உயர்ந்து முடிந்தன. Tata Motors, Bharat Electronics, Power Grid Corp, JSW Steel, NTPC ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தன Bharti Hexacom, EID Parry, KPR Mills, Radico Khaitan, Lloyds Metals, Coromandel International, Coforge, Indian Hotels, BLS Internation, Persistent Systems, 360 ONE WAM, Kaynes Technologies உள்ளிட்ட 240க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன. புதன்க்கிழமை ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7135 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57,080 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 100 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.