மளிகைப் பொருட்கள் விலை உயரப்போகுது உஷார்..

கட்டுக்கு அடங்காத பணவீக்கம் காரணமாக இந்தியாவில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் விலை உயரப்போகிறது. ஹிந்துஸ்தான் யுனிலிவர், கோத்ரேஜ், டாபர், டாடா கன்சியூமர், பார்லே உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையை உயர்த்த இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணமாக இறக்குமதி வரி அதிகரிப்பு கூறப்படுகிறது. டீ, சமையல் எண்ணெய், சோப்பு, சரும பொருட்களின் விலை 5 முதல் 20%வரை உயர வாய்ப்புள்ளது. சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி கடந்த செப்டம்பரில் 22%உயர்ந்ததை அடுத்து அது தற்போது 40%ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டும் சர்க்கரை, கோதுமை மாவு, காஃபியின் விலை உயர்ந்திருந்தது. FMCG நிறுவனங்களின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு 4.3%உயர்ந்துள்ளதாக பிசோம் என்ற நிறுவனம் கூறியுள்ளது. கிராமங்களில்தான் இந்த பொருட்கள் அதிகம் விற்கப்படுகின்றன. சோப்பு மற்றும் டீயின் விலையை இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் உயர்த்தியுள்ளது. டாபரும் சுகாதாரப் பொருட்கள், பற்பசை உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. நகர்புற சந்தைகளில் அடுத்த 2 காலாண்டுகளுக்கு இதன் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தற்போதைய விலையேற்றம், அனைத்து வகை பாக்கெட்டுகளிலும் எதிரொலிக்கும் என்றும் Fmcg நிறுவன விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.