விவசாயியாக மாறிய டெக்கி..
பெங்களூருவைச் சேர்ந்த சஷிகுமார் 400 கோடி ரூபாய் வருவாயை ஈட்டும் புதிய உத்தியை கையில் எடுத்துள்ளார். யார் இந்த சஷி குமார் பார்ப்போமா? பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பெற்ற சஷி,அமெரிக்காவில் உள்ள இல்லினாய் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றவர். 17 ஆண்டுகள் விப்ரோ உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் பணியாற்றிய சஷி குமாருக்கு இந்திய விவசாயம் மீது தீராத காதல் இருந்து வந்தது. இப்ப செய்யலனா எப்பயும் செய்ய முடியாது என்று துணிந்து கடந்த 2010 ஆம் ஆண்டு டெக் வேலையை விட்ட சஷி, விவசாயத்தில் கவனம் செலுத்தியதுடன் அக்ஷய கல்பா என்ற நிறுவனத்தை தொடங்கினார். நஞ்சில்லாத உணவு இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். முதலில் இவரை அனைவரும் கேலி செய்தனர். ஆனால் விவசாயத்தில் லாபத்தை செய்துகாட்டினார் சஷி.. இவரின் நிறுவனம் மூலமாக இந்தியா முழுக்க உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து சுத்தமான பால், பழங்களை விற்பனை செய்து வருகிறார். இவரின் முயற்சியை கண்ட ஜீரோதா நிறுவனர் நிகில் காமத், அக்ஷய கல்பா நிறுவனத்துக்கு ஆதரவளித்துள்ளார். தற்போது இந்த நிறுவனம் 400 கோடி ரூபாய் வருவாயை ஈட்ட காத்திருக்கிறது. செயற்கை உரங்கள் இல்லாமல் இயற்கையாகவே எரு உள்ளிட்டவற்றை தயாரித்து வரும் சஷி, கடந்த பத்து ஆண்டுகளில் தனது வயலின் ஆர்கானிக் கார்பன் அளவை 0.3%-ல் இருந்து தற்போது 0.98%ஆக அதிகரித்துள்ளது. பால், வாழைப்பழம், கோழிகள், தேன், காய்கனிகளை இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் வி்ற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.