சரிகிறதா ரிலையன்ஸ் சாம்ராஜ்யம்..?
சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் நடப்பாண்டில் மட்டும் 23%சரிவை கண்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த நிறுவனம் அ சந்திக்கும் மிகப்பெரிய சரிவு இதுவாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு சரிந்து வரும் அதே நேரம், இந்தியாவின் முன்னணி டெக் நிறுவனமாக உள்ள டிசிஎஸ் மற்றும் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி அந்த இடத்தை பிடிக்க முயற்சிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக லாம் மட்டுமே அளித்து வந்த ரிலையன்ஸ் நிறுவனம் சறுக்கலை சந்தித்துள்ளது. அதே நேரம் 11ஆவது ஆண்டாக எச்டிஎப்சி நிறுவனம் லாபத்தை பதிவு செய்துள்ளது. சந்தை மூலதன அடிப்படையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த ரிலையன்ஸ் நிறுவனத்தை வரும் நாட்களில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் மிஞ்ச இருக்கிறது. எனினும் ரிலையன்ஸின் வீழ்ச்சி உடனே நடக்க வாய்ப்புகள் குறைவு என்றும் அதே நேரம் 5 ஆண்டுகளுக்கு பிறகு வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்