நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பி மறைந்தார்..
இந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்காலாமானார். அவருக்கு வயது. 92. இந்தியாவின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தின் விதையை இட்டவர் என்று கூட வர்ணிக்கலாம். கடந்த வியாழக்கிழமை அவரின் வீட்டில் திடீரென சுயநினைவை இழந்த அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு வயது சார்ந்த பிரச்சனைகள் அதிகம் இருந்ததால் அவரின் உயிர் பிரிந்தது. மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங், இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். உலக வரலாற்றில் மிகவும் அரிதாக அடுத்தடுத்த இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக பதவியை அலங்கரித்தார். இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை மீட்டெடுத்ததில் இவரின் பங்கு அதிகம், அணுசக்தி ஆற்றலை இருநாடுகளும் பகிரும் ஒப்பந்தத்தை 2008-ல் நிகழ்த்தி உலக கவனத்தை ஈர்த்தவர் மன்மோகன் சிங். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மன்மோகன்சிங், எந்த ஊழல் புகாரிலும் சிக்காதவர். மிகவும் அமைதியாக பேசும் மன்மோகன்சிங்கின் தொலைநோக்கு திட்டங்கள் ஏராளம். 1971 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றிய அவர், 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் நிதியமைச்சரானார். வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவில் குவிய வைத்ததில் பெரும்பங்காற்றியவர் மன்மோகன்சிங். தனது வாழ்நாளில் பிரதமராக தனது சிறப்பான பணியை செய்திருப்பதாக மன்மோகன்சிங் அண்மையில் கடைசியாக பேட்டி அளித்திருந்தார். மன்மோகன் சிங்குக்கு ஒரு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.