8.8 லட்சம் கோடி இழப்பு..

அமெரிக்கா நடத்தி வரும் வணிக யுத்தம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு காணப்பட்டது. மெக்சிகோ மற்றும் கனடா மீதான 25விழுக்காடு கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 4 ஆம் தேதி முதல் அமல்படுத்துவோம் என்ற அறிவிப்பால் உலகளவில் சமநிலையற்ற சூழல் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1414 புள்ளிகள் சரிந்து 73ஆயிரத்து 198 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 420 புள்ளிகள் குறைந்து 22ஆயிரத்து 124 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிந்தது. இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8.8லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. sanofi india,ஸ்ரீராம் பைனான்ஸ், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. Persistent Systems, Tech Mahindra, Wipro, Coforge, Mphasis, Infosys, HCL Tech, TCS நிறுவன பங்குகள் பெரிய சரிவை கண்டன. கிட்டத்தட்ட 1000 நிறுவன பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத சரிவை கண்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் 400 ரூபாய் குறைந்து 63 ஆயிரத்து 680 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம், ஒரு ரூபாய் விலை குறைந்து 105 ரூபாயாக விற்பனையாகிறது.
கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 1லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்