22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

தங்கபத்திரம் தற்போதைய நிலைதான் என்ன?

அரசாங்கமே விற்ற தங்க பத்திரம் மூலம் பல ஆண்டுகளாக லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் அதனை விற்காமல் அப்படியே வைக்க முடிவெடுத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்களில் 14.7 டன் அளவுக்கு முதலீட்டாளர்கள் தங்கத்தை வெளியே எடுத்து பணமாக மாற்றியுள்ளனர். 10 கிராம் தங்கம் 1 லட்சம் ரூபாய் ஆகும் வரை காத்திருக்கவும் முதலீட்டாளர்கள் முடிவெடுத்துள்ளனர். மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் அரசியல் சமநிலையற்ற தன்மையாலும் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்கின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு தங்கப்பத்திரத்தை ரிசர்வ் வங்கி விற்கத் தொடங்கியது. அப்போது தங்க பத்திரத்தில் முதலீடு செய்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிக ரிட்டர்ன்ஸ் கிடைத்துள்ளது. இதேபோல் 2017 மே 12, 2020 மார்ச் 11 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட தங்க முதலீட்டு பத்திரங்களும் முன்கூட்டியே பணமாக எடுத்துக்கொள்ள தகுதியாக உள்ளது. நடுத்தர காலகட்டத்தில் தங்கம் இன்னும் 5 விழுக்காடு விலை உயரும் என்றும், அதற்குள் இன்னும் தங்கத்தை விற்காமல் வைத்திருப்பதே சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். மூலதன தொகைக்கு மதிப்பு உயரும் அதே நேரம், முதலீட்டாளர்களுக்கு 2.5% வட்டியும் கிடைக்கும். தங்கம் விலை உயர்ந்து வரும் அதே நேரம் அது அரசுக்கு பெரிய கடன்சுமைகளை அதிகரிக்கிறது.
54,427 கோடிக்கு விற்கப்பட்ட பத்திரங்களுக்கு, 1.15டிரில்லியன் ரூபாயை அரசு செலுத்த வேண்டியுள்ளது. இப்போது வரை இந்தியாவிடம் 879 டன் தங்கம் உள்ளது. 12.4விழுக்காடு மொத்த கையிருப்பாக இது உள்ளது. 2017-18-ல் ஈக்விட்டியில் முதலீடு செய்தவர்களைவிடவும், தங்கப்பத்திரத்தின் ரிட்டன் 14.71%ஆக உள்ளது. கடந்தாண்டு பிப்ரவரிக்கு பிறகு தங்கப்பத்திரம் நிறுத்தப்பட்டு, கோல்ட் ஈடிஎப் ஆக முதலீடுகள் குவிந்து வருகின்றன. கடந்தாண்டு 28,530 ஆக இருந்த தங்க சேமிப்பு சொத்து மதிப்பு கடந்த மாதம் வரை 55,677 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *