Latest:
Brands that Built India: Lupin Pharma – From a ₹5,000 Loan to a Global Healthcare Powerhouseஇந்தியாவைக் கட்டியெழுப்பிய பிராண்டுகள் - உலகளாவிய சுகாதாரத் துறை ஜாம்பவானாக உயர்ந்த லூபின் பார்மா7.19%-ஐ எட்டிய 10 ஆண்டு கால அரசுப் பத்திரத்தின் வருவாய் (yield)MDR காரணமாக ஆண்டுக்கு ₹7,000-9,000 கோடி கூடுதல் சுமைSproutlife Foods நிறுவனத்தை முழுமையாகக் கையகப்படுத்திய ITCAI ஏஜெண்டுகளை கட்டுப்படுத்தும் என்விடியாவின் பாதுகாப்பு மென்பொருள் கருவிகள்வங்கித் துறையில் மிகப்பெரிய பாய்ச்சலாக அமையும் AIகிழக்கு இந்தியாவில் பால் பொருட்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் ITC2031க்குள் PV சந்தையில் 15% பங்கை எட்ட டாடா மோட்டார்ஸ் இலக்கு3 நாள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்த வங்கி ஊழியர் சங்கங்கள்Brands that Built India: Lupin Pharma – From a ₹5,000 Loan to a Global Healthcare Powerhouseஇந்தியாவைக் கட்டியெழுப்பிய பிராண்டுகள் - உலகளாவிய சுகாதாரத் துறை ஜாம்பவானாக உயர்ந்த லூபின் பார்மா7.19%-ஐ எட்டிய 10 ஆண்டு கால அரசுப் பத்திரத்தின் வருவாய் (yield)MDR காரணமாக ஆண்டுக்கு ₹7,000-9,000 கோடி கூடுதல் சுமைSproutlife Foods நிறுவனத்தை முழுமையாகக் கையகப்படுத்திய ITCAI ஏஜெண்டுகளை கட்டுப்படுத்தும் என்விடியாவின் பாதுகாப்பு மென்பொருள் கருவிகள்வங்கித் துறையில் மிகப்பெரிய பாய்ச்சலாக அமையும் AIகிழக்கு இந்தியாவில் பால் பொருட்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் ITC2031க்குள் PV சந்தையில் 15% பங்கை எட்ட டாடா மோட்டார்ஸ் இலக்கு3 நாள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்த வங்கி ஊழியர் சங்கங்கள்

உள்நாட்டு செய்திகள்

ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை அறிமுகப்படுத்தும் ஐ.டி.சி நிறுவனம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று அனுசரிக்கப்படும் தேசிய இரத்தசோகை தினத்தை முன்னிட்டு, ஐடிசி நிறுவனம், அயோடினுடன் இரும்புச்சத்து ஊக்கிகள் சேர்க்கப்பட்ட ‘ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இரத்தசோகை, குறிப்பாக இரும்புச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ‘இரத்தசோகை இல்லாத பாரதம்’ போன்ற திட்டங்களை ஊக்குவிப்பதற்கும் உதவும்.

இரும்புச்சத்து குறைபாடு, குறிப்பாக குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்களிடையே, ஆற்றல் நிலைகள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிக்கிறது. அதன் மூலம் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கிறது. இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய, இந்நிறுவனம் அயோடினுடன் சேர்த்து கண்ணுக்குத் தெரியும் இரும்புச்சத்து ஊக்கிகள் கொண்ட ‘ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை’ அறிமுகப்படுத்தியுள்ளது.

இது இந்திய வீடுகளில் அன்றாடம் இருக்கும் ஒரு அடிப்படைப் பொருளான உப்பின் மூலம் இரும்புச்சத்தை வழங்கும், அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தீர்வாகும். இந்த டீ ஸ்பூன் அளவிலான இந்த உப்பில் (5 கிராம்), ICMR-NIN உணவு வழிகாட்டுதல்களின்படி சராசரி தினசரி இரும்புச்சத்து தேவையில் 25%-ஐ வழங்குகிறது. அதே நேரத்தில் உணவின் சுவையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்தத் தயாரிப்பு, குறைந்தபட்ச பழக்க மாற்றத்துடன், குடும்பங்கள் தங்கள் தினசரி இரும்புச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க உதவுகிறது. உதாரணமாக, 1 டீ ஸ்பூன் (5 கிராம்) உப்பில், ஒரு கிண்ணம் கீரைக்குச் சமமான இரும்புச்சத்து உள்ளது.

தேசிய ஆய்வுகளின்படி, இந்தியாவில் 67% பாலர் பள்ளி குழந்தைகள், 59% வளரிளம் பருவப் பெண்கள், 57% வயது வந்த பெண்கள், 31% வளரிளம் பருவ சிறுவர்கள் மற்றும் 24% பள்ளி வயது குழந்தைகள் (5-9 வயது) இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிமுக விழாவில் பேசிய ஐடிசி நிறுவனத்தின் ஸ்டேபிள்ஸ் வணிகப் பிரிவின் தலைமை நிர்வாகி அனுஜ் ருஸ்தகி, “கடந்த 5 ஆண்டுகளாக, ஐடிசி சம்போஷன் திட்டத்தின் மூலம், பல்வேறு பொது சுகாதார அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட உப்பைத் தொடர்ந்து பயன்படுத்துவது இரத்த சோகையைக் குறைப்பதில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் நிரூபித்துள்ளோம். ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பின் அறிமுகம், இந்தக் கற்றலின் உச்சகட்டமாகும்”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *