75 லட்சம் சாதாரண தொகையா…?
நகர்புற விவகாரங்கள்துறை அமைச்சக ஆலோகரகாக இருப்பவர் தினேஷ் கபிலா.இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது குறிப்பிட்ட தினேஷ், 45 லட்சம் ரூபாயில் வீடுகள் வாங்கும் அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதன் வரம்பை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளதாக கூறியுள்ளார். அனைவரும் வீடு வாங்க உகந்த தொகை எவ்வளவு என்ற வரம்பை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளதாக குறிப்பிட்டார். தற்போது வரை 45 லட்சம் ரூபாய் என்பது மக்களின் கைகளில் புழங்கும் பணம் அளவாக தெரிவதாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக நிதியமைச்சகத்துக்கு ஒரு பரிந்துரை சென்றுள்ளது என்றார்.
டெல்லி,மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் நிலத்தின் மதிப்பு கணிசமாக உயர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நகரமயமாதல் அதிகரித்து வரும் சூழலில்,ரியல் எஸ்டேட் துறை முக்கிய பங்குவகிப்பதாக தினேஷ் கூறியுள்ளார். 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ரியல் எஸ்டேட் துறை சந்தை அளவு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 13%ஆக ரியல் எஸ்டேட் துறை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது ரியல் எஸ்டேட்துறையில் உள்ள பிரச்னைகளை தீர்க்கும் அமைப்பாக உள்ள ரெரா,86 %வீடுகளை டெலிவரி செய்திருப்பது மிக முக்கியமான சாதனையாக பார்க்கப்படுவதாகவும் தினேஷ் குறிப்பிட்டுள்ளார். கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி படையெடுப்போரின் அளவு மிகவும் அதிகரித்து வருவதால் ரியல்எஸ்டேட் துறையை கவனிக்க வேண்டும் என்று தேசிய வீட்டு வங்கியின் தலைவர் Dakshita Dasகுறிப்பிட்டுள்ளார். நாட்டில் ரியல் எஸ்டேட்துறைதான் 2 ஆவது பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இருப்பதாக சிக்னேச்சர் குளோபல் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரவி அகர்வால் தெரிவித்துள்ளார்.