பெப்சிகோவுக்கு சலுகை தர முடியாது!!!
வெறும் காற்றை நிறப்பி விற்கப்படுவதாக விமர்சிக்கப்படும் லேஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பெப்சிகோ நிறுவனம் தான். இந்த நிறுவனம் அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த நிறுவனம் உருளைக்கிழங்கில் ஒரு குறிப்பிட்ட ரகத்துக்கு மட்டும் காப்புரிமை பெற்றுள்ளது. இந்த வகை உருளைக்கிழங்குகள் லேஸ் நிறுவனத்துக்கு மட்டும் தான் உற்பத்தி செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. FC5 எனப்படும் சிறப்பு காப்புரிமையை PPVFR என்ற அமைப்பு கடந்த 2021-ல் ரத்து செய்தது. இதனை எதிர்த்து தான் டெல்லி உயர்நீதிமன்றத்தை பெப்சி நிறுவனம் நாடியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் 1989ஆம் ஆண்டு முதல் தனது ஆலையை தொடங்கி இயக்கி வருகிறது. இந்த நிலையில் Fc5 எனப்படும் ரக உருளைக்கிழங்குகளை விளைவித்த விவசாயிகளுக்கு எதிராக ஏற்கனவே பெப்சி கடந்த 2029-இல் வழக்குத் தொடர்ந்தது. ஆனால் 2021-ல் அந்த காப்புரிமையை ரத்து செய்ததற்கு எதிராக பலகட்ட சட்டப் போராட்டங்களை பெப்சி நிறுவனம் முன்னெடுத்துள்ளது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் நல்ல முடிவு என்று விவசாய ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மான்சாண்டோ நிறுவனத்திடம் பலவகை பாரம்பரிய விதைகள் இருந்து வரும் நிலையில் அது இந்தியாவில் இருந்து பலவகை வணிகத்தை முடித்துக்கொண்டு வெளியேறியது. இந்த நிலையில் இதே பிரச்னை தற்போது பெப்சி நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.