லம்போர்கினி வைத்திருக்கும் இந்திய வம்சாவளியினர்!!!

லம்போர்கினி என்ற காரை சாதாரண மக்கள் எல்லாம் வாங்க முடியாது. வசதிபடைத்த பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் அந்த கார்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீபன் விங்கிள்மேன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், லம்போர்கினி கார் வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.இந்தியாவில் இந்த காரை வாங்குவதற்கு அதிக கட்டுப்பாடுகளும்,அதிக வரிகளும் உள்ளதாகவும் ஸ்டீபன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெரிய உள்கட்டமைப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசியா,பிரிட்டன்,வடக்கு அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் இந்த கார்களை அதிகம் வாங்க விரும்பவது இந்திய வம்சாவளியினர்தான் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியாவில் லம்போர்கினி நிறுவனம் உருஸ் மற்றும் ஹூராகன் ஆகிய இரண்டு ரக கார்கள் மட்டுமே விற்று வருகிறது.இந்தியாவில் கடந்தாண்டு இந்த வகை கார்கள் 92 மட்டுமே விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்த காரை வாங்க வேண்டுமெனில் 28 விழுக்காடு ஜிஎஸ்டி, செஸ் வரி 22% வரையும்,சுங்க வரி 60 முதல் 100 விழுக்காடு வரையும் விதிக்கப்படுகிறது.உலகளவில் நடப்பாண்டின் முதல் பாதி ஆண்டில் 5341 கார்களை அந்த நிறுவனம் விற்றுள்ளது. இது முந்தய ஆண்டைவிட 5% அதிகமாகும். நடப்பாண்டில் முதல் முறையாக விற்பனை 3 இலக்கங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனைவிலை ஏறினாலும் , பொருளாதார மந்தநிலை வந்தாலும் தங்கள் நிறுவன காரை வாங்கும் ஆர்வம் மக்களிடம் குறையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு இறுதி வரை உருஸ் மற்றும் ஹூராகன் ஆகிய ரக கார்களுக்கான ஆர்டர்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன.new Aventadorஎன்ற கார்களுக்கான ஆர்டர்கள் 2026 வரை உள்ளன.