இந்தியர்கள் 62 நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்ல..
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோரை அதிகப்படுத்தும் நோக்கிலும், பல நாடுகளின் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு என்ற பட்டியல் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட்டுக்கு 80 ஆவது இடம் கிடைத்திருக்கிறது. இதன்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய இயலும். உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்கள் திகழ்கின்றன. இந்த 6 நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல இயலும். ஆப்கானிஸ்தான் நாட்டவர் வெறும் 28 நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடியும் என்றும் சிரியாவின் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 29 நாடுகளுக்கும், ஈராக் நாட்டவர் 31, பாகிஸ்தானியர்கள் 34 நாடுகளுக்கும் விசா இன்றி பயணிக்க முடியும். இந்தியர்கள் ஓமன், கத்தா ஆகிய நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். பின்லாந்து நாட்டவரால் 193 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும், அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்போர் 188 நாடுகளுக்கு செல்ல இயலும். இந்தியர்கள் , இலங்கை, செயின்ட் லூசியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, வனூவாத்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் எளிதாக பயணம் செய்ய இயலும் என்கிறது IATA அமைப்பு