வோல்டாஸை விற்கிறதா டாடா..?
1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது வோல்டாஸ் நிறுவனம். சில தலைமுறைகளாக இந்த பெயர் இந்தியர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் என்றே சொல்லலாம். இந்த நிலையில் வோல்டாஸ் நிறுவனத்தின் இந்திய வணிகபிரிவை விற்க டாடாட நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தையில் போட்டி அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த விற்பனையை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்கெலிக் என்ற நிறுவனத்துடன் இணைந்து பணிகளை வோல்டாஸ் நிறுவனம் செய்து வருகிறது. இந்த சூழலில் வோல்டாஸை வைத்துக் கொள்வதா வேண்டாமா என்று டாடா குழுமம் முடிவு எடுக்க இருக்கிறது. கடந்த ஒரு நிதியாண்டில் வோல்டாஸ் பெகோ நிறுவனத்தின் வருவாய் 96.7 பில்லியன் இந்திய ரூபாயாக இருக்கிறது.மொத்த மின்சாதன பொருட்கள் சந்தையில்,வோல்டாஸ் பெகோவின் ஃபிரிட்ஜ் 3.3%,வாஷிங் மிஷின் வெறும் 5.4% என்ற அளவில்தான் இருக்கிறது. இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லை, வோல்டாஸ் நிறுவனத்தை விற்றுவிடுவதா என்பது குறித்து டாடா குழுமம்தான் முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.