வரி சலுகை கிடைக்குமா?
சுவிட்சர்லாந்தில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யும்பட்சத்தில் வரி சலுகை கிடைக்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஐரோப்பிய தடையற்ற வர்த்த அமைப்பான EFTA மூலம் இதைசெய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் முதலீடுகளை முதல் பத்து ஆண்டுகளிலும், அடுத்த 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அடுத்த 5 ஆண்டுகளிலும் செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. EFTA அமைப்பில் தற்போது வரை ஐஸ்லாந்து, லியச்டென்ஸ்டின்,நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. புதிய ஒப்பந்தத்தின்படி 1 விழுக்காடு அளவுக்கு வரி குறையும் என்று கூறப்படுகிறது. இதே பாணியில் உள்ள வரிச்சலுகையை ஐக்கிய அரபு அமீரகம் பெற்று வருகிறது. இந்தியாவில் தற்போது இறக்குமதி வரி 12.5 விழுக்காடு ஆக உள்ளது. இது மட்டுமின்றி 2.5 விழுக்காடு செஸ் வரியாக உள்ளது. தங்கத்தின் இறக்குமதி 2024 நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் 30 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இதன் மதிப்பு 38 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.