வருகிறது டொயோடாவில் புதிய மின்சார கார்கள்..
ஜப்பானைச் சேர்ந்த டொயோடா மோட்டார்ஸ் என்ற நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் சாலிட் செல் பேட்டரிகள் மூலம் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வகை பேட்டரிகள் வேகமாக சார்ஜ் ஆகும் என்பதாலும், நீண்டநேரம் தாக்குப்பிடிக்கும் என்றும் அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரபல நிறுவனமான டெஸ்லா மற்றும் சீன நிறுவனமான BYDக்கு போட்டியாக இந்த திட வடிவ பேட்டரிகள் களமிறக்கப்பட உள்ளன. டொயோட்டா நிறுவனமும் Idemitsu கோசன் என்ற நிறுவனமும் சேர்ந்து திட வடிவ பேட்டரிகள் தயாரிக்க கடந்தாண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இந்த வகை பேட்டரிகள் 2027-28 காலகட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான திட வடிவ பேட்டரிகள் உற்பத்தி செய்யவும் பணிகள் நடந்து வருகின்றன. திடவடிவ பேட்டரிகள் வெறும் 10 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 1,200 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்ய முடியும்.
33 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட முதலீடுகள் குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் பெற திட்டமிடப்பட்டுள்ளது. 3 நாட்கள் முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல நாடுகளிலும் இருந்தும் முதலீட்டாளர்கள் குஜராத்தில் குவிந்தது குறிப்பிடத்தக்கது.