22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
தொழில்துறை

டீலர்களுக்கு ₹2,500 கோடி இழப்பு

புதிய ஜி.எஸ்.டி. விகிதக் குறைப்பு, நவராத்திரி தொடக்கம் ஆகியவை கார் விற்பனையை கணிசமாக உயர்த்தியுள்ளன. இருப்பினும், பயணிகள் வாகன டீலர்கள் சுமார் ₹2,500 கோடி இழப்பை சந்தித்துள்ளனர்.

காரணம், அவர்கள் ஏற்கனவே செலுத்தியிருந்த இழப்பீட்டு செஸ் ரத்து செய்யப்பட்டதாகும். செப்டம்பர் 22 முதல் ரத்து செய்யப்பட்ட இந்த செஸ் தொகை சுமார் ₹2,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒரு டீலருக்கு சுமார் ₹3 முதல் ₹5 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று ஒரு தொழில்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த நிதிச்சுமையை எவ்வாறு பகிர்ந்து கொள்ளலாம் அல்லது ஏதேனும் ஒரு நிதித் திட்டத்தை வகுக்க முடியுமா என்று டீலர்கள் உற்பத்தியாளர்களின் பதிலுக்காகக் காத்திருக்கின்றனர்.


இந்த சிக்கல் குறித்து உற்பத்தியாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். அவர்கள், “எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன் விளக்கத்துக்காகக் காத்திருப்பதாக தெறிகிறது.

செப்டம்பரில் மட்டும் கார் டீலர்களால் செலுத்தப்பட்ட செஸ் தொகை சுமார் ₹4,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. 2.0 செப்டம்பர் 22-ல் அமலுக்கு வருவதற்கு முன், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் டீலர்கள் பல்வேறு தள்ளுபடிகள், சலுகைகளை வழங்கினர்.


மகிந்திரா போன்ற சில உற்பத்தியாளர்கள், டீலர்களைப் பாதுகாக்கவும் விற்பனையை உறுதி செய்யவும், ஜி.எஸ்.டி.யில் ஏற்படும் வித்தியாசத்தை தாங்களே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர். இது அவர்களுக்கு ஒரு ஆறுதலை அளித்துள்ளது.
நவராத்திரி சீசன் தொடங்கியுள்ளதால் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. மாருதி சுசுகி இந்தியா திங்களன்று 30,000 கார்களை விற்பனை செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் 10,000 கார்களை விநியோகம் செய்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், கடந்த 35 ஆண்டுகளில் இத்தகைய உற்சாகத்தைக் கண்டதில்லை என்றும், தினமும் சராசரியாக 15,000 முன்பதிவுகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமும் ஒரே நாளில் 11,000 வாகனங்களை விற்பனை செய்து கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச விற்பனை என்று தெரிவித்துள்ளது. இது பண்டிகைக் காலத்தின் வலுவான உணர்வையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *