22% விற்கப்பட்ட செலோ ஐ.பி.ஓ…
செலோ வேர்ல்ட் என்ற பிரபல நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டை செய்திருக்கிறது. அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த விற்பனையின் மூலம் ஆயிரத்து 900 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.முதல் நாளில் இந்த பங்கு 22விழுக்காடு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 2 கோடியே 20 லட்சம் பங்குகளில் முதல்நாளில் மட்டும் 49.56 லட்சம் ஈக்விட்டி பங்குகள் விற்கப்பட்டுள்ளன.தற்போது விற்கப்பட்டுள்ள பங்குகள் முழுக்க முழுக்க புரோமோட்டர்களால் செய்யப்பட்டது. பங்குகளை வைத்துள்ள ரதோட் குடும்பத்தினர்,ஒரு பங்கின் விலையை 617 முதல் 648 ரூபாயாக நிர்ணயித்திருக்கின்றனர். இந்த ஐபிஓ வரும் 1ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது. 26 விழுக்காடு ரீட்டெயில் முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை வாங்கிக்கொள்ள இயலும்.அதிக சொத்துமதிப்பு கொண்டோருக்காக 44% இந்த நிறுவனத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை செலோ நிறுவனம் தனது பணியாளர்களுக்கு ஒதுக்கியுள்ளது.நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணியாளர்களுக்கு 61 ரூபாய் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது..
வீட்டு உபயோக பொருட்கள், எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து இந்திய அளவில் கவனம் பெற்ற நிறுவனமாக செலோ நிறுவனம் திகழ்கிறது.