2030-ல் 12%ஏற்றுமதி…
இந்தியாவின் ஏற்றுமதி என்பது 2030ஆம் ஆண்டில் 12% ஆக இருக்கும் என்று பார்க்லேஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. உலகின் ஏற்றுமதியில் 2030-ல் இந்தியாவின் பங்கு மட்டும் 4%ஆக இருக்கும் என்று பார்க்ளேஸ் கணித்துள்ளது. இது உலகளாவிய பொருளாதாரத்தில் 0.75 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். மோசமான உலக சூழல் இடைக்காலமாக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் உலக விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்படும் என்றும் பார்க்லேஸ் வங்கி எச்சரித்துள்ளது. எனினும் பல நாடுகளில் வர்த்தக விரிவாக்கம் நடைபெறும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களின் முதல் தேர்வாக இந்தியா இருக்கிறது. இதனால் தொழில்நுட்ப ஏற்றுமதியில் இன்தியாவுக்கு ஆதாயம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இருந்து பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் இந்தியா பல இடங்களில் இறக்குமதியை நம்பியே இருக்கின்றது. வங்கதேசம் மற்றும் வியட்னாமை விட பருத்தி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறையில் இந்தியாவுக்கு அதிக ஆதாயம் உள்ளதாக அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு பிறகு விநியோக சங்கிலி பாதிப்பு மட்டுமே பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதை மட்டும் சரி செய்தால் பெரிய சாதகம் இந்தியாவுக்கு கிடைக்கும் என்றும் பார்க்லேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சேவைத்துறையில் இந்தியா பெரிய ஆதிக்கம் செலுத்தும் என்றும் பார்க்லேஸ் தெரிவித்துள்ளது.