15லட்சம் கோடி ரூபாய் இழப்பு..
இந்திய பங்குச்சந்தைகளில் திங்கட்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 600 புள்ளிகள் வரை சரிந்தது.பகல் 12 மணி அளவில் சரிவு மேலும் அதிகரித்து 2 ஆயிரத்து 600 புள்ளிகள் வரை சென்செக்ஸ் வீழ்ந்தது.இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியிலும் பலத்த சரிவு காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2ஆயிரத்து 222 புள்ளிகளும்,தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 662 புள்ளிகளும் குறைந்திருந்தன. பாரத் ஃபோர்ஜ், ஷீலா ஃபோம், அசோகா புயிட்கான் நிறுவன பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன.மேரிகோ, தேவ்யானி இன்டர்நேஷனல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்தை கண்டன அமெரிக்காவில் ஜூலை மாதத்தின் வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் 4புள்ளி3 விழுக்காடாக வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அமெரிக்க சந்தைகளில் வீழ்ச்சி காணப்பட்டது. அமெரிக்க பங்குச்சந்தைகளின் எதிரொலியாகவே இந்திய சந்தையிலும் பெரிய சரிவு ஏற்பட்டது.முதலீட்டாளர்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஒரே நாளில் இழப்பு ஏற்பட்டுள்ளது.. சென்னையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி திங்கட்கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனையானது. ஒருசவரன் 51 ஆயிரத்து760 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6,470 ரூபாயாக விற்கப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி முன்தின விலையில் இருந்து1 ரூபாய் உயர்ந்து 91 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளியும் விலையும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து 91 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்