22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஆன்லைன் பேமண்டுக்கு 18 %ஜிஎஸ்டி நிறுத்தி வைப்பு?

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2000 ரூபாய்க்கு குறைவான டிஜிட்டல் பேமண்ட்டுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் அவ்வாறு வரி வசூலிக்கப்பட்டால் என்னவகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஃபிட்மென்ட் கமிட்டி ஆராயவும் நிதியமைச்சகம் ஆணையிட்டுள்ளது. 54 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசியது என்ன.. ஆன்மிக சுற்றுலா, மற்றும் சுற்றுலா பயணம் செல்வோருக்கு ஜிஎஸ்டி வரி வசூல் 18 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஜிஎஸ்டி நுண்ணறிவின் இயக்குநர் சார்பில் 7 பல்கலைக்கழகங்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆராய்ச்சி பிரிவுக்கு 220 கோடி ரூபாய் ஒதுக்கியது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தேவையான பொருளுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பதை விட்டுவிட்டு, ஹெலிகாப்டர் பயணத்துக்கு வரி குறைப்பது எந்த வகையில் நியாயம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *