ஐடிஎப்சி ஃபர்ஸ்ட்டின் 5 ஆண்டு திட்டம்…
சந்தையில் சமீபகாலமாக வேகமாக வளர்ந்து வரும் வங்கியாக ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி உருவெடுத்து வருகிறது. இந்த வங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மோசமான வாராக்கடன்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் 20 விழுக்காடு சொத்துகளை விரிவுபடுத்தவும், டெபாசிட்களை 25 விழுக்காடாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. 20 விழுக்காடு கடன் வளர்ச்சி என்பது எட்டுவதற்கு மிக எளிதான இலக்கு என்று ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டதாக கூறும் அவர்,தற்போது நடப்பு கணக்குகளை மற்றும் சேமிப்புக் கணக்குகளை நன்கு நிர்வகிப்பதாக கூறியுள்ளனர். இந்த வங்கி கடனாக மட்டும் 1லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 1லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2029ஆம் ஆண்டிற்குள் வங்கியின் கிளைகளை ஆயிரத்து 700 முதல் ஆயிரத்து 800 கிளைகளாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
தற்போது அந்த வங்கியில் 897 கிளைகள் உள்ளன. அண்மையில் இந்த நிறுவனத்தின் வங்கி மற்றும் சாதாரண பிரிவுகள் இணைக்கப்பட்டன. அதில் கிடைத்த வருவாயை அழகாக கடனாக கொடுத்து சந்தையை இந்த வங்கி திரும்பிப்பார்க்க வைத்தது. ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் நிறுவனம் 18 விழுக்காடு ஈக்விட்டி ரிட்டர்ன்ஸ் அளிக்கத் தயாராக இருக்கிறது. இதேபோல் சொத்துகள் மீதான ரிட்டர்னசை 2029-க்குள் 2 விழுக்காடாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாம். தற்போது இந்த வங்கியின் லாபம் 2232 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில் இதனை வரும் 2029 மார்ச் மாதத்திற்குள் 12 ஆயிரம் முதல் 13ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. கைவசம் இருக்கும் பணத்தை கார்பரேட்களுக்காக டெபாசிட் செய்வதில் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் நிறுவனம் அட்டகாசமாக இயங்கி வருகிறது.