ரஷ்ய உலோகங்களுக்கு தடை விதிப்பு?
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதிக்க துவக்கம் முதலே பிரிட்டன் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய உலோகங்களை லண்டன் உலோக சந்தையில் தடை செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
உடனடியாக தடை விதிக்கலாமா என்பது குறித்து விவாதிக்க 3 வாரம் விவாத காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய உலோக சந்தையில் ரஷ்யாவின் பங்களிப்பு 9% ஆக உள்ளது.
லண்டன் உலோக சந்தையில் ரஷ்ய உலோகங்களுக்கு தடை விதிக்கப்பட்டால் உலகளவில் உலோக பொருட்கள் விலையும் ஆட்டம் காண வாய்ப்புள்ளது. எனினும் திட்டமிட்டு ரஷ்ய பொருட்களை தவிர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் லண்டன் சந்தையில் தடை விதிக்கப்பட்டால் ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் உலோகங்களின் விலை குறைய அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தங்கள் நாட்டு உலோகங்களுக்கு தடைவிதிக்கப்படும் பட்சத்தில், சலுகை விலையில் விற்றுவிடுவோம் என்று ரஷ்யாவின் முன்னணி சுரங்கம் மற்றும் உலோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த காரணிகளால் ரஷ்ய உலோகங்கள் குறித்த விவாதம் உலகளவில் எழுந்துள்ளது.