டாலர் பாண்டில் நிதி திரட்டும் அதானி..
பிரபல தொழிலதிபர் அதானியின் பசுமை ஆற்றல் நிறுவனம் 409 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிதி திரட்ட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியும் அமெரிக்க டாலர் பாண்ட்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 18 ஆண்டுகள் பணம் செலுத்தும் வகையில் இந்த பத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிதி திரட்ட இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது. ஒரே ஆண்டில் சந்தையில் மீண்டுவந்த பெரிய நிறுவனமாக அதானி மாற இருக்கிறது. எனினும் சராசரி பத்திர காலமான 12.7 ஆண்டுகளாகவும் சுருங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பார்க்லேஸ், டிபிஎஸ் பேங்க், டாய்ட்ச் வங்கி, எமிரேட்ஸ், ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி, ஐஎன்ஜி வங்கி உள்ளிட்ட முதலீட்டாளர்களுடன் இது குறித்து கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. ஆசியா,மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்காவில் வரும் 28 ஆம் தேதி இன்னொரு கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஃபிட்ச் ரேட்டிங்கின்படி, அதானி கிரீன் எனர்ஜி லிமிடட் நிறுவனம்,18 ஆண்டுகள் பத்திரம் வெளியிடும் என்றால் அதனை BBB எக்ஸ்பி என்ற வகையில் வைக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கடந்தாண்டு ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதால், அதானி குழுமத்தின் பங்குகள் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் , பல்வேறு கட்ட முதலீடுகளால் அந்த நிறுவனம் ஓரளவு வீழ்ச்சியில் இருந்து மீண்டுள்ளது. அதானி குழும பங்குகளின் பத்திரங்கள் இயல்பான அளவை விட அதிகளவாக உயர்ந்துள்ளன. டாலர் பாண்டுகள் என்பதில் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்பதால் அந்நிறுவனம் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.