சிப் ஏற்றுமதியில் சீனாவுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடு
செமிகண்டெக்டர்கள் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை சீனா பயன்படுத்த அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிப் உற்பத்தி மூலம் ராணுவ பயன்பாட்டை அதிகரிக்க சீனா திட்டமிட்ட நிலையில் அமெரிக்கா இந்த கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது
அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிப் தயாரிக்கும் 31 சீன நிறுவனங்களை அமெரிக்க அரசு பட்டியலிட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் தொழில்நுட்ப நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்கின்றன என கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
எந்த வகையான சிப் தயாரிக்கிறார்கள் என்பதற்கு கூடுதலாக சான்றும் பெற வேண்டும் என்று அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி காட்டி வருகிறது
குறிப்பிட்ட 31 நிறுவனங்கள் அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி என்ன தயாரிக்கிறார்கள் என்பதை ஆராயவும்,அமெரிக்க வணிகத்துறை அனுமதித்தால் மட்டுமே இந்த நிறுவனங்கள் அமெரிக்க நுட்பத்தை கையாள முடியும் என்றும், விதிகளுக்கு உட்படாமல் செயல்பட முடியாது என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது