ஏர்டெல் கோரியது என்ன?
பெரிய கடன் சுமையில் தவித்து வரும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் , தங்களுக்கு வழங்கப்பட்ட அலைக்கற்றைக்கான் வங்கி உத்தரவாதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடுப்பான ஏர்டெல் நிறுவனம், தொலைதொடர்புத்துறைக்கு ஒரு கோரிக்கை முன்வைத்துள்ளது. அதில் அனைத்து நிறுவனங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை. கடன் சுமையால் வோடஃபோன் தவிப்பது புரிவதாக கூறியுள்ள ஏர்டெல், அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் பாரபட்சமின்றி ஒரே மாதிரியான அனுகுமுறை வேண்டும் என்றும், நிதி நிலை பற்றி கவலைப்படாமல் இதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் செலுத்திதான் அலைக்கற்றையை தங்கள் நிறுவனம் பெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 2021-ல் உருவாக்கப்பட்ட தொலைதொடர்புத்துறை சீர்திருத்தங்கள் அனைத்து நிறுவனங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏர்டெல் சுட்டிக்காட்டியது. 3 மாத தொகையை செலுத்துவதாக நிறுவனங்கள் தெரிவித்தால் மட்டுமே கூடுதலாக சலுகைகளை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வோடஃபோனுக்கு சலுகைகள் அளித்தால் எங்களுக்கும் தாருங்கள் என்று ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களும் போட்டிக்கு நிற்கின்றன. வங்கி உத்தரவாதமாக வோடஃபோன் செலுத்த வேண்டிய தொகை மட்டும் 27,000 கோடி ரூபாய் உள்ளது. ஜியோவுக்கு இந்த தொகை 4,000 கோடி ரூபாயும், ஏர்டெல் நிறுவனம் இன்னும் 3,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. 24 ஆயிரம் கோடி ரூபாயை ஈக்விட்டி மூலம் திரட்டிய வோடஃபோன் நிறுவனம் இன்னும் 25,000 கோடி ரூபாயை கடனாக பெற திட்டமிட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வங்கி உத்தரவாதமாக அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு வங்கி உத்தரவாதம் உள்ளிட்டவையுடன் 35 மாதங்களுக்கு எந்த தவணையும் இல்லாமல் பணத்தை செலுத்த சலுகை அளித்தது. இந்த சலுகை 4 ஆண்டுகள் வரை பொருந்தும் என்றும் கூறப்பட்டது. 2012,2014,2015,2016 மற்றும் 2021 ஆகிய காலங்களில் ஏலம் எடுத்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.