டாடாவை சமாளிக்க சீனாவுடன் கைகோர்க்கும் அம்பானி
அண்மையில் பெரிய அளவு செலவு செய்து மகனுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி, தற்போது டாடாவுடன் போட்டியை சமாளிக்க சீன நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளார். டாடா குழுமத்தில் உள்ள டிரென்ட் என்ற நிறுவனம் விற்பனையில் அசத்தி வருகிறது. அந்நிறுவனம் 12 மடங்கு அதிக விற்பனை செய்துள்ளது. மலிவு விலையில் ஸ்டைலான உடைகளை விற்பதால் டாடாவின் சுடியோ நிறுவனம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 80 சுடியோ கடைகள் மட்டுமே இருந்த நிலையில் கடந்த காலாண்டு தகவலின்படி இந்தியாவில் 560 சுடியோ கடைகள் உள்ளன. 164 நகரங்களில் இந்த கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. குறைவான வாடகை உள்ள நகரங்களில் அதிக லாபமும் இந்த கடைகளுக்கு கிடைக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில் மத்திய கிழக்கு, சிங்கப்பூர், கத்தார் அபுதாபியில் இருந்து முகேஷ் அம்பானியின் நிறுவனத்துக்கு முதலீடுகள் குவிந்து வருகின்றன.
முதலிட்டை பிடிக்க வேண்டும் என்பதற்காக அந்நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தற்போது ஆயத்தமாகி வருகிறது. shein என்ற சீன நிறுவனம், கடந்த 2020-ல் இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட மோதலால் இந்தியாவை விட்டு வெளியேறியது. இந்நிலையில் அந்த நிறுவனம் ரிலையன்சுடன் சேர்ந்து திரும்ப வருகிறது. சீனாவில் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் தற்போது சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தை வைத்துள்து. அந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் ஆரம்ப பங்கு வெளியீடு செய்ய உள்ள நிலையில் அதற்கு அம்பானி உதவ இருக்கிறார். கடந்தாண்டு சுடியோவுக்கு நேர் போட்டியாக தொடங்கப்பட்ட யுவஸ்டா நிறுவனத்தில் எந்த பொருட்களும் 1000 ரூபாய்க்கு மேல் இருக்காது. ஆனால் சுடியோ அளவுக்கு அம்பானியின் நிறுவனத்தால் விற்க முடியவில்லை.அம்பானிக்கு தற்போது உடனடியாக ஒரு பெரிய வெற்றி தேவைப்படுவதால் அவர் எதையும் செய்வார் என்கிறார்கள் நிபுணர்கள். 999ரூபாய்க்குள் ஆடைகள் வாங்க விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு டிரீட் காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்