சாலைகள் சரியில்லை என்றால் புகார் தெரிவிக்க ஒரு ஆப்….
உலகிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளின் தாயகமாக இந்திய சாலைகள் உள்ளன. இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்த பொதுமக்களின் ஒத்துழைப்பை மத்திய சாலை போக்குவரத்துத்துறை நாடியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அண்மையில் உருவாக்கியுள்ள செயலியான சுகத் யாத்ரா என்ற செயலியின் வாயிலாக இந்திய சாலைகளின் தரத்தை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது
நெடுஞ்சாலைகள் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளை அடிக்கடி பயன்படுத்துவோரிடம் இருந்து கருத்துகளை பெற்று துரிதமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி மின்சார வகையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதிநவீன சாலைகளை அரசு திட்டமிட்டு வந்தாலும் ஏற்கனவே உள்ள குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலைகள், போக்குவரத்து விதிகளை மக்கள் மீறுவது, தரமில்லாத சாலைகளால் உலகிலேயே அதிக உயிரிழப்புகள் இந்திய சாலைகளில் நிகழ்வது மறுக்க முடியாத உண்மைகளாக மாறியுள்ளன, இவற்றை சரி செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.