ஐஓஎஸ், ஐபேட் ஓ எஸ் வச்சிருக்கீங்களா அரசு எச்சரிக்கை..
அரசு கட்டுப்பாட்டில் உள்ள கணினி அவசரகால செயலாக்க குழுவான சிஇஆர்டியின் இந்திய பிரிவு, அண்மையில் ஐஓஎஸ், ஐபேட் ஓஎஸ், மேக் ஓஎஸ் வைத்திருப்போருக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்தது. குறிப்பிட்ட இந்த ஓஎஸ்கள் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அரசின் நிறுவனம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு சரிபார்ப்பு உள்ளிட்ட அம்சங்களை ஹேக்கர் எளிதில் புகுந்து தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. யாருக்கெல்லாம் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது. அதன்படி 17.7, 18 ஆம் என் ஆப்பிள் ஓஸ், ஐபேட் ஓஸுக்கு முன்பு உள்ளவர்களுக்கும், ஆப்பிள் மேக் ஓஎஸ் சோனோரா 13.7, 14.7, 15 ஆகியவை இந்த தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. இதேபோல் ஆப்பிள் டிவி ஓஸ் 18, ஆப்பிள் வாட்ஸ் ஓஎஸ் 11, சபாரி 18, எக்ஸ் கோட் 16, ஆப்பிள் விஷன் ஓஎஸ் 2 ஆகியவற்றுக்கு முந்தைய வெர்ஷன் வைத்திருப்போருக்கு பாதிப்பு வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலே சொன்ன ஓஎஸ்களில் உள்ளவர்கள் புதிய மேம்படுத்தப்பட்ட இயங்குதளத்துக்கு மாறினால் பாதிப்பு இருக்காது என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளையும் , லினக்ஸ் நிறுவன தயாரிப்புகளையும் மத்திய அரசு எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.