வாடிக்கையாளர்கள் மன்னர்கள் இல்லையோ..?
இந்தியாவில் பனி மூட்டம் என்பது எத்தனை பெரிய விஷயம் என்றால்,விமானத்தை இயக்கமாட்டேன் என்று சொல்லும் விமானியை பயணி அடிக்கும் அளவுக்கு சீரியசான விஷயம்தான். கடும் பனிமூட்டம் நிலவியதால் டெல்லியில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களின் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தாமதமாகின. டிஜிசிஏ எனப்படும் விமான பொது ஏவியேஷன் இயக்குநரகம் விமான சேவைகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில் எப்போது விமான சேவையை ரத்து செய்ய முடியும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் இருந்து விமான ணிகளின் புகார்கள் அதிகரித்து இருப்பதாக லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. குறிப்பாக லக்கேஜ்,விமான போக்குவரத்து தாமதம், உணவுவிலைகள், போர்டிங் கேட்களில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின்போதும் விமான சேவைகளில் குறைகள் இருந்ததாக கூறப்படுகிறது. 284 மாவட்டங்களில் 25 ஆயிரம் பயணிகளிடம் இருந்து கருத்துகளும் பெறப்பட்டுள்ளன. இந்தியாவில் இண்டிகோ மற்றும் டாடா குழுமம் வாங்கியுள்ள ஏர் இந்தியா மட்டுமே பெரிய பங்காற்றி வருவதாகவும் சிறிய ரக விமான நிறுவனங்களில் பாதிப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.
விமான சேவைகளை வழங்கி வந்த கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் நோட்டிஸ் அளித்துள்ள நிலையில் ஆகாசா ஏர் விமானத்தில் போதுமான விமானிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 15.20 கோடி பேராக உயர்ந்திருக்கிறது. இது ஆண்டுக்கு ஆண்டு 8.34 விழுக்காடு வளர்ச்சியாகும். இந்நிலையில் பனிமூட்டம் உள்ளிட்ட காரணங்களால் காலதாமதம் குறித்து விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு உடனுக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது. CAT3 ரக ஓடுபாதைக்கு போதுமான ஒப்புதல் கிடைக்கப்படாமல் டெல்லியில் பனி காலங்களில் விமானங்களை இயக்கப்படுகின்றன. மோசமான காலநிலை காலநிலை நேரங்களில் CAT 3 ரக பயிற்சி இல்லாத ஓட்டுநர்களை எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்று அண்மையில் ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.