22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

தனி ரூட் எடுக்கும் அசோக் லேலாண்ட் …

நாட்டில் பெட்ரோலிய பொருட்களில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக பலரும் மின்சார வாகனங்கள், இயற்கை எரிவாயு வாகனங்களை விரும்புகின்றனர். பல நிறுவனங்களும் இதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் முன்னணி பஸ் மற்றும் டிரக் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலாண்ட் நிறுவனம் நெடுந்தூரம் பயணிக்கும் பேருந்து மற்றும் டிரக்கில் ஹைட்ரஜனை எரிபொருளாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இது சாத்தியமாக அதிக வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சரவணன் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரஜன் வாயு விலையிலும் குறைவு, சுற்றுச்சூழலும் கேடு ஏற்படாது என்பதால் இதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக அசோக் லேலாண்ட் நிறுவனம் கூறியுள்ளது.

இன்டர்னல் கம்பஷன் மற்றும் பியூல் செல் வடிவில் இந்த ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கார், பைக் போன்ற வாகனங்களில் ஹைட்ரஜனை அடைப்பது சவாலான காரியம் என்று கூறியுள்ள அசோக் லேலாண்ட் அதிகாரிகள், ஹைட்ரஜனை பாதுகாப்பான முறையில் அடைத்து அதனை சரக்கு வாகனங்களில் பயன்படுத்தினால் பணமும் நேரமும் மிச்சமாகும் என்பது அவரின் கருத்தாக உள்ளது. இந்தியாவில் முதலில் கிரே ஹைட்ரஜன் முதலில் உற்பத்தியாக உள்ளது. பின்னர் பசுமை ஹைட்ரஜன் வாயு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

வரும் 2030ம் ஆண்டுக்குள் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. கரியமில வாயு வெளியேற்றம் மற்றும் பெட்ரோலிய இறக்குமதிக்கு ஹைட்ரஜன் உற்பத்தி முற்றுப்புள்ளி வைக்க உதவும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *