ஜிஎஸ்டி வரி வசூல் சரிவு..
கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவாக வசூலாகியுள்ளது. அந்த மாதத்தில் வசூலான ஜிஎஸ்டியின் அளவு 1.73லட்சம் கோடி ரூபாய் மட்டுமே, இது கடந்த ஆகஸ்ட்டை விட 1% குறைவாகும். செப்டம்பரில் நிகர உள்ளூர் வருவாய் 5.9%உயர்ந்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ரீஃபன்ட்ஸ், போக மீதமுள்ள தொகை 4.5%அதிகம் என்றும் மத்திய மறைமுக வரிகள் அமைப்பான சிபிஐசி தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி ரீஃபன்ட்ஸ் தொடர்ந்து 2 ஆவது மாதமாக உயர்ந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் 24.3%ஆக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 39.2% உயர்ந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி ரீஃபண்ட் அளவு 38%ஆக இருந்தது. இந்தியாவின் 7 மாநிலங்களில் நெகட்டிவ் வருவாய் இருந்து வருகிறது. மணிப்பூரில் இருந்து வரவேண்டிய நிதி 33% சுருங்கியுள்ளது. குஜராத்தில் இருந்து பெரிய அளவில் ஜிஎஸ்டியும் வசூலாகவில்லை. தேசிய அளவைவிட குறைவாக தெலங்கானாவில் 1விழுக்காடு, ராஜஸ்தானில் 2, உத்தரபிரதேசத்தில் 3, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் தலா 5 %அளவுக்கு ஜிஎஸ்டி குறைவாக வசூலாகியுள்ளது. தேசிய சராசரி அளவு 6%ஆகும். சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள ஹரியானாவில் மட்டும் வருவாய் 24%உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் டெல்லியில் 20% வளர்ச்சி கிடைத்துள்ளது. இந்தியாவில் இந்த மாதம் முதல் பண்டிகைகள் அதிகம் இருப்பதால் வரும் மாதங்களில் வருவாய் மேலும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்