ஐபிஓ விலையை நிர்ணயித்த ஏதெர் நிறுவனம்..
முன்னணி பைக் உற்பத்தி நிறுவனமாக உள்ள ஏதெர் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலையை நிர்ணயித்துள்ளது. அதாவது ஒரு பங்கை மக்கள் வாங்க விரும்பினால் அதற்காக 304 ரூபாய் முதல் 321 ரூபாய் வரை செலுத்த நேரிடும். இதன்மூலம் 2ஆயிரத்து 981 கோடி ரூபாய் ஆரம்ப பங்கு வெளியீட்டை ஏதெர் எனர்ஜி நிறுவனம் பெறும். வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இந்த ஆரம்ப பங்குகளை வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பெரிய முதலீட்டாளர்களுக்கு வரும் 25 ஆம் தேதியே ஏதெர் நிறுவன பங்குகள் கிடைத்துவிடும். புதிதாக 2 ஆயிரத்து 626 கோடி ரூபாய் நிதியாகவும், ஏற்கனவே கைவசம் இருக்கும் 1.1 கோடி ஈக்விட்டி பங்குகளை விற்பதன் மூலமும் 2 ஆயிரத்து 981 நிதி திரட்டப்பட இருக்கிறது. கடனை குறைக்கும் நோக்கில் மகாராஷ்டிராவில் புதிதாக ஒரு ஆலையை அந்நிறுவனம் தொடங்க இருக்கிறது. அந்த நிறுவனத்தின் மதிப்பு 11ஆயிரத்து 956 கோடி ரூபாயாக உள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட்டில் 6,145 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆரம்ப பங்கு வெளியீட்டை ஓலா நிறுவனம் செய்திருந்தது. ஆராய்ச்சி நிறுவனங்களை மேம்படுத்த ஏதெர் எனர்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிறுவனங்கள் சார்ந்த முதலீட்டுக்கு 75 விழுக்காடும், நிறுவனங்கள் அல்லாத முதலீடுகள் 15 விழுக்காடும், பொதுமக்கள் வாங்கும் வகையில் 10 விழுக்காடும் அந்த நிறுவனம் பங்குகளை வகைப்படுத்தியுள்ளது. ஆக்சிஸ்கேபிடல், நோமுரா ஃபைனான்சியல் அட்வைசரி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் லீட் மேனேஜர்களாக செயல்பட இருக்கின்றனர். வரும் மே 6 ஆம் தேதி ஈக்விட்டி பங்குகளை பங்குச்சந்தைகளில் பட்டியலிடவும் ஏதெர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 
			 
							