பங்குகளை திரும்ப வாங்கும் BAT..
இந்தியாவில் புகையிலை மட்டுமின்றி பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனமாக ஐடிசி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளை பெருமளவு வைத்திருக்கும் நிறுவனம் பிரிட்டிஷ் அமெரிக்கா டொபாகோ நிறுவனம் எனப்படும் BAT நிறுவனம், இந்த பாட் நிறுவனம் லக்கி ஸ்ட்ரைக் என்ற சிகரெட்களை விற்று வருகிறது. பாட் நிறுவனம் அண்மையில் தன் வசம் இருந்த பங்குகளில் குறிப்பிட்ட அளவை விற்று பணமாக மாற்றியது. இதன் காரணமாக 1.6பில்லியன் பவுண்ட் அளவுள்ள பாட் நிறுவன பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது., இந்த பைபேக் எனப்படும் பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ளும் நடைமுறையை இந்தாண்டும் அடுத்தாண்டும் செய்ய இருப்பதாக பாட் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக நடப்பாண்டில் 700 மில்லியன் பவுண்டு அளவுக்கும், அடுத்த ஆண்டில் 900 மில்லியன் பவுண்டு அளவுக்கு பங்குகளையும் வாங்க அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. விற்றது போக இன்னும் 25 விழுக்காடு அளவுக்கு ஐடிசியின் பங்கை பாட் நிறுவனம் தன் வசம் வைத்திருக்கிறது. ஏற்கனவே பங்குதாரர்களின் அழுத்தம் அதிகரித்ததன் காரணமாகவே பாட் நிறுவனம் ஐடிசி நிறுவனத்தின் பங்குகளை விற்று பணமாக்கியது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள பங்குச்சந்தைகளில் சரிவை சந்தித்து வரும் பாட் நிறுவனம் , இந்த பங்கு திரும்ப வாங்கும் நடவடிக்கை குறித்து பிரபல பத்திரிகை ஒன்றின் நேர்காணலில் அறிவித்துவிட்டார்.