22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பேத்திக்கு அடிச்சது ஜாக்பாட்…

மாதக்கடைசியில் அக்கவுண்டில் இருக்கும் 500 ரூபாய் உதவுவதைப் போல பெங்களூருவில் ஒரு ருசிகர சம்பவம் நடந்திருக்கு.. மும்பையை சேர்ந்தவர் பிரியா ஷர்மா. இவர் தனது தாத்தாவால் கோடீஸ்வரனாக மாறியிருக்கிறார். பிரியாவின் தாத்தா கடந்த 2004இல் எல்என்டி பங்குகளை வாங்கி இருக்கிறார் . ஒன்று இரண்டல்ல 500 பங்குகளை வாங்கி இருக்கிறார். காலப்போக்கில் அதை மறந்தே விட்ட பிரியாவின் தாத்தா ஒரு உயிலையும் எழுதி வைத்துள்ளார். அதில் தனது மூச்சுக்கு பிறகு தனது பேத்தி இந்த பங்குகளை வைத்துக் கொள்ளலாம் என அந்த உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயில் அண்மையில் பிரியாவின் கைகளுக்கு கிடைத்தது. தனது தாத்தா தவறி விட்டதால் உரிய சட்டப் போராட்டம் நடத்தி வந்த பிரியா சர்மா , மும்பையில் இது போன்ற ஒரு பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நிறுவனத்தின் உதவியை நாடினார். பிரியாவின் இந்த நடவடிக்கை நடந்து வந்த இதே சூழலில் அவருக்கு காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. பிரியாவின் தாத்தா வாங்கி இருந்தது வெறும் 500 பங்குகள் மட்டுமே. அந்தப் பங்குகள் காலப்போக்கில் போனஸ் பங்குகளாக மாறி ஒன்று இரண்டாக மாறி தற்போது ஒன்பது மடங்காக வளர்ந்து இருக்கிறது, இதன் மூலம் பிரியாவுக்கு ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் அளவுக்கு பங்குகள் உள்ளன. பிரியா ஷர்மாவின் இந்த விசித்திரமான வழக்கை கையில் எடுத்த l&t நிறுவன அதிகாரிகள் ப்ரீயா தான் உரிய வாரிசு என்பதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி கேட்டிருந்தனர் . மேலும் பாதுகாப்புக்காக யாராவது ஒருவரின் கையெழுத்தையும் அவர்கள் கேட்டிருந்தநர் உடனடியாக பிரியாவின் உறவினர் ஒருவர் முன்வந்த நிலையில், ஓராண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு பிரியாவின் கைகளில் தற்போது ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. நல்ல தாத்தா தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *