இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு..

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்சில் சிறிய கேப் முதலீடுகள் மார்ச் மாதத்தில் ஏழு முதல் 8 விழுக்காடு அளவுக்கு சரிவு காணப்படுகிறது. இதற்கு முன்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மாதத்தில் ஒன்பது விழுக்காடு வரை சரிந்தது மிகப்பெரிய சரிவாக கருதப்பட்டது. 2015 க்கு பிறகு மொத்தம் நான்கு முறை மட்டுமே இந்த அளவுக்கு பெரிய சரிவுகள் காணப்பட்டுள்ளன. 900க்கும் மேற்பட்ட சிறிய ரக பண்டுகளை மும்பை பங்குச் சந்தை கண்காணித்து வருகிறது. இந்த வகை பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்வதை தவிர்த்து வருவதன் காரணமாகவே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சரிவை சந்தித்து வருகிறது. அதிக பணப்புழக்கம் இருக்கும் சிறிய கேப் முதலீடுகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.